Posts

Showing posts with the label அனுபவப் பகிர்வு

இலட்சியம்.......தடம் புரலக் கூடும்

Image
இலட்சியம்.......தடம் புரலக் கூடும் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவனிடம் நீ பெரியவரானதும் என்னவாக வரப் போகிராய் என எல்லா ஆசிரியர்களும் நச்சரிப்பதுண்டு. அது my self கேட்கும் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. இந்தக் கேள்வி சாதரணமாக போய் விட்ட போதிலும், உள்ளர்த்தம் நிறைந்த கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலட்சியம் என்பதற்கு ஆங்கிலத்தில் ambition என பொருற்படும். இதற்கான சரியான விளக்கத்தை oxford அகராதி இவ்வாறு தருகிறது.(a strong desire to do or achieve something.)அதாவது ஏதாவதொன்றை செய்து முடிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ ஒருவரிடம் காணப்படும் தீராத ஆசை என சொல்லலாம். எனவே நம் அனைவருக்கும் ஏதாவதொரு இலட்சியம் கட்டாயம் இருக்க வேண்டும் என மேற்கண்ட விளக்கத்திலிருந்து புலனாகிறது. ஒரு பிள்ளை பிறந்துபிள்ளை சிறிது வளர்ந்து, அதற்கு புரிந்து கொள்ளக் கூடிய தன்மை வந்தவுடனே, அவர்கள் அந்த பிள்ளைக்கு நீ இன்னாரைப் போல வர வேண்டும் அல்லது இவரைப் போல படிக்க வேண்டும் என பல்வேறுபட்ட விடயங்களை புகுத்துகின்றனர். இதனால் அந்த பிள் ளை யும் அதே மன நிலையுடன் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாகி ஆரம்ப கல்விக்காக பாடசாலை சென்று

அநுபவப் பகிர்வு - 1 கண்டிக்கு நாங்கள் புதிது

Image
அநுபவப் பகிர்வு - 1 கண்டிக்கு நாங்கள் புதிது இலங்கையிலே எல்லா விடயங்களையும் ஒரே ஊரிலேயே பெற்றுக் கொள்ள முடிவதில்லை, என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளத் தேவையில்லை என்பது யதார்த்தமான உன்மை. இலங்கையர் என்ற வகையில் எல்லோரும் ஏதாவது ஒரு தேவை நிமித்தம் எப்போதாவது ஒரு நாளிலாவது கொழும்பை நோக்கி படையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும்.இதற்கு நான் மட்டும் விதிவிலக்கள்ள. ஆனால் இந்தப் பதிவோ கொழும்பைப் பற்றியதல்ல. இது கண்டியைப் பற்றியது. 2005ம் ஆண்டளவில் எமது பிரதேச பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் இல்லாத படியால் பிற பிரதேசங்களுக்கு சென்று எம் உயர்தர கல்வியை தொடர வேண்டிய துர்ப்பாகிய நிலை. நானும் எனது மூன்று நன்பர்களும் (பலரும் படித்தனர், இருப்பினும் இவர்கள் 3 பேரும் பால்ய சிநேகிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ) சிதறிச் செல்ல வேண்டிய நிலை, இருப்பினும் மனதோரத்தில் சிறியதாகஒரு சந்தோசம், ஏனெனில் நால்வரும் கண்டிக்குத் தான் மேலதிக வகுப்புகளுக்கு வர வேண்டும்.