Posts

Showing posts with the label எண்ணக் கிறுக்கல்கள்- எழுத்துப் பதிவு

மனக் குரங்கு

Image
குரங்கு அடிக்கடி கிளை விட்டு கிளை தாவும். ஏன் மரம் விட்டு மரம் தாவுவதும் அதற்கு அத்துப்படி. அதற்கு பல வேளைகளில் புரிவதில்லை எது சரி எது பிழை என்று. அதனால் தான் என்னவோ அது சரியென்று நினைத்து செய்யும் பல செயல்கள் பிழையாகிப் போனாலும் அதை ஏற்க அது மறுக்கிறது. அதனால் தானே அது ஒரே தவறை பலமுறை செய்கிறது. இது போன்ற செய்கைகளுக்கு உதாரணத்தின் தனித்துவம் குரங்காராய் தான் இருக்க முடியும். சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள் " குரங்கு கையில் பூ மாலை போல் " என்று. பூமாலை கிடைத்த குரங்கு அந்த பூ மாலையை என்னென்ன வெல்லாம் செய்யும் என்று நான் சொல்லித் தன் தெரிய வேண்டியவர்கள் அல்லர் நீங்கள். ஏனைய ஐந்து அறிவு ஜீவிகளுடன் ஒப்பிடுகையில் குரங்குக்கு ஒரு தனித்துவமான் இடம் நிச்சயம் உண்டு என்பதில் மறுப்பதற்கு இல்லை. வித்தைகள் காட்டி சீவனம் நடாத்தும் குரங்காட்டியிடம் உள்ள குரங்கு மட்டும் ஏதோ வித்தியாசம் தான். ஏனெனில் அதற்கு தெரிகிறது நாம் வெளியில் தனியே சென்று பழக்கப்பட்டவனும் கிடையாது , கூட்டமாக வாழ்ந்த முன் பின் அனுபவங்களும் கிடையாது. எனவே எஜமான் சொல்வதை கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. கேட்

தொட்டும் தொடாமலும்

Image
// பெண் பெண் என்றால் பேயிறங்கிய காலம் மலையேறிப்பாய், இப்போது "கிரீஸ் பேய்" என்றால் பெண்ணே இறங்க வேண்டிய காலமிது.விடயம் அதுவல்ல.பெண் என்றதும் சாதாரண மெக்கானிக் முதல் மிகப் பெரும் அதிகாரி வரை ஒரே முறையாகத் தான் அவதானிக்கப்படுகிறாள். என்ன மெக்கானிக் இயல்பாக பார்க்கிறான் ஆனால் அதிகாரியோ இயல்பை மீறி நாசூக்காய் பார்க்கிறான். கடைசியில் இயல்பை மீறியவன் நல்லவன் என்றும் இயல்பானவன் கெட்டவன் என்றும் பெயர் பெறுகிறான். இந்தப் பெயரை சூட்டுவதும் அதே தாய்குலம் தான்.இதையெல்லாம் தாண்டி பெண்ணை தாயாக அல்லது சகோதரியாக அதுவும் இயல்பாகப் பார்ப்பதில் தான் நிச்சய வெற்றி மனிதனுக்கு கிடைக்கும். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- // பிரச்சினை பிரச்சினை பிரச்சினை பிரச்சினை.எங்கு பார்த்தாலும் இதே சொல் தான் தாரக மந்திரமாய் ஒழித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில் மனிதனாய் பிறந்ததுமே பிரச்சினைகளும் கூடவே பிறக்கின்றன. உலகத்தில் யாருக்கு தான் பிரச்சினை இல்லை. நாட்டாமை தொட்டு நாட்டை

What INTERNET means to me......

Image
Network of networks, simply called as internet. Although that is the definition given to the term “internet”, I suppose it is just limited only to the text books. Internet used to be a mystery in my early school days & later in my secondary school level, an ISP (According to my memory it should be LBN) provided 10 hours of internet surfing for 200 rupees. At that time it’s too much for that kind of facility. By now internet has become the fourth basic need of human apart from food, shelter & dress. Everyone, from the age of 6 to unlimited age, uses internet. But most of the users don’t know actually what internet means, even me also. They really have no need in knowing that because they might think it is useless. In my routine, when I open a web browser such as Chrome or Firefox or even Internet Explorer in order to surf internet at first a blue page is come out. If a person who doesn’t know even a drop about internet may ask me whether the colour of internet i

சம்பந்தமில்லாமல்..............

Image
சம்பந்தமில்லாமல்............... நுணிப் புல்லில் பனி படர்ந்திருந்த வேளை , சூரியன் தன் கதிரை சற்றே விரிக்கும் வேளை ,பறவைகளின் கீச்சிடும் ஒலியை கேட்டவண்ணம், எழுந்த நான் படுக்கைக்கு கிட்டவே வந்த "bed coffee" ஐயும் அருந்தினேன். bed coffee என்றதும் நினைவுக்கு வந்தது.... கட்டிலில் படுத்தெழுந்தவுடன் அருந்தினால் bed coffee என்றால், பாயில் படுத்தெழுந்தவன் அருந்தும் போது அது "mat coffee" ஆகி விடுமோ? அது அப்படி இருக்கட்டும் சென்றவாரம் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியதானது.(அழையா விருந்தாளியாக அல்ல என்பதை கவனத்தில் கொள்க). அங்கே சென்ற போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒரு கவிதை மனதில் எண்ணியது, கொஞ்சம் அதையும் தான் பார்ப்போமே?(எவ்வளவோ பண்ணிட்டோம் , இத பண்ண மாட்டோமா?) இரு மனம் இணயும் இந்தத் திருமணம் நறுமணம் கமலும் சோலைவணமாக மாறா இந்தத் தனி மனதின் வாழ்த்துக்கள். மாறாக ஒரு மனமாய் மறுபடியும் இரு மனங்களாக மாறி மறுமணம் புரியாமல் வாழ இனி மனதில் உறுதி கொள்க. எப்படி? மேல் வரி ஒ.கே, அடுத்ததையும் சொல்லியிருந்தால், கண்டிப்பாக பலரது க

இலட்சியம்.......தடம் புரலக் கூடும்

Image
இலட்சியம்.......தடம் புரலக் கூடும் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவனிடம் நீ பெரியவரானதும் என்னவாக வரப் போகிராய் என எல்லா ஆசிரியர்களும் நச்சரிப்பதுண்டு. அது my self கேட்கும் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. இந்தக் கேள்வி சாதரணமாக போய் விட்ட போதிலும், உள்ளர்த்தம் நிறைந்த கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலட்சியம் என்பதற்கு ஆங்கிலத்தில் ambition என பொருற்படும். இதற்கான சரியான விளக்கத்தை oxford அகராதி இவ்வாறு தருகிறது.(a strong desire to do or achieve something.)அதாவது ஏதாவதொன்றை செய்து முடிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ ஒருவரிடம் காணப்படும் தீராத ஆசை என சொல்லலாம். எனவே நம் அனைவருக்கும் ஏதாவதொரு இலட்சியம் கட்டாயம் இருக்க வேண்டும் என மேற்கண்ட விளக்கத்திலிருந்து புலனாகிறது. ஒரு பிள்ளை பிறந்துபிள்ளை சிறிது வளர்ந்து, அதற்கு புரிந்து கொள்ளக் கூடிய தன்மை வந்தவுடனே, அவர்கள் அந்த பிள்ளைக்கு நீ இன்னாரைப் போல வர வேண்டும் அல்லது இவரைப் போல படிக்க வேண்டும் என பல்வேறுபட்ட விடயங்களை புகுத்துகின்றனர். இதனால் அந்த பிள் ளை யும் அதே மன நிலையுடன் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாகி ஆரம்ப கல்விக்காக பாடசாலை சென்று
Image
தனிமை எனும் கொடுமை மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே,மனிதனானவன் இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவித்தே வந்துள்ளான் என்பதில் துளி கூட ஐயமில்லை. அவனது நிலமைகள், அவனது சூழல் என்பவற்றிற்கேற்ப அவனது இன்னலின் அல்லது கஷ்டத்தின் தாக்கம் என்பன வேறுபடலாம்.எ னினும் மொத்தத்தில் எவருக்கும் கஷ்டங்களை, இன்னல்களை முகங்கொடுக்க நேர்ந்திருக்கும். அதே போல எந்த மனித ன், நான் என்ன செய்கிறேன்? எவரிடம் போய் என் நிலமையை பகிரப் போகிறேன்? அடுத்து என்ன செய்வது? என பல்வேறுபட்ட கேள்விக்கணைகளை தன்னுள் தொடுத்துக் கொள்ளும் உணர்வு தான் தனிமை என புரிகிற பாஷையில் சொல்லி விடலாம். எனினும் பொதுமைப்பாட்டில் நோக்குமிடத்து தனிமை என்பதை மிகத் திருத்தமாக வரையறுக்க முடியா விட்டாலும், எவனொருவன் தனது கஷ்ட நஷ்டங்களை, துன்ப துயரங்களை பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையே என அங்கலாய்க்கும் உணர்வையே தனிமை என சுருங்கக் கூறி விடலாம்.அதை உணர்வு என சொல்வதில் எனக்கு உடண் பாடில்லை. ஏனென்றால் அதை உணர்வு எ ன்று சொல்வதற்கு பதிலாக ஒரு துர்பாக்கிய நிலை என குறிப்பிடுவது சாலச் சிறந்தது. தனிமை என்பது எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது என்றால் எவரை வேண்டுமென்ற

மை உம் நாமும்

Image
"மை" உம் நாமும் அழிக்க வேண்டியது - இயலாமை உஷ்னத்தினால் நாடுவது - குளிர்மை பலத்தைக் கூறுவது- வல்லமை மக்களை வாட்டுவது- வறுமை மனிதனை அழிப்பது- பொறாமை கொள்ளக் கூடாதது- பகைமை கொள்ள வேண்டியது- பொறுமை கொல்ல வேண்டியது - சிறுமை விலை மதிப்பற்ற பருவம்- இளமை இளமையில் வரக்கூடாதது - ஏழ்மை நல்லவர் செய்வது- நன்மை நல்லோரல்லாதோர் செய்வது - தீமை நான் வெறுப்பது - தனிமை ஒன்றுமே இல்லாதது - வெறுமை எம்முள் வரக்கூடாதது - வேற்றுமை சொல்லில் இருக்க வேண்டியது - வாய்மை வாழ்வில் இருக்க வேண்டியது - எளிமை பேச்சில் தெரிய வேண்டியது - இனிமை நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை - தன்மை மற்றவருக்கு செய்யக் கூடாதது - கொடுமை உலகம் விரும்புவது - பசுமை முடிந்தளவு ஒரே சமயத்தில் முயற்சித்துள்ளேன். ஏதும் விடுபட்டிருந்தால் அறியத்தரவும்
Image
In ancient kingdom of Anuradapura, there are many ruins of historically valuable creations still there. the kings who ruled Anuradapura dedicated them in creating lot of unbilievable creations to us. As one of the such creation is the stone bridge,namely "Galpalama", acroos Malwatu Oya situated about 8 km away from Anuradapura town. Now the Archaeology department has announced its as a ancient property. As you look at the name board it's be like a place abbonden.We cant imagine such things that means how they cut the stone as it is and how could they built a such creation. Its still being a wonder! What a creation it was. I forget to tell another thing , the creator of this creation has not published yet. Look at the wiev at the river side. As you can see its half side has brokenup and fallen down into theriver.But in my point of view I think most of