Posts

Showing posts with the label எண்ணக் கிறுக்கல்கள்-கவிதைப் பதிவு

கிறுக்கல்கள்

Image
********************************************************************************************************** ரயில் கடவைகள் கூட இணைந்து விடலாம் சமான்தரக் கோடுகளுக்கு உதாரணமாய் நானும் ,நீயும் ********************************************************************************************************** நிலா வெட்கத்தில் முகத்தை முந்தானைக்குள் ஒழித்துக் கொண்டது அமாவாசை ********************************************************************************************************** கேட்டவுடன் என்னை அங்குமிங்கும்  தேடச் சொல்கிறது உன் பெயர் ********************************************************************************************************** நடக்காது என  நன்கு தெரிந்த பின்பும் என் அப்பாவிக் கண்கள் உன்னைப் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை இன்னும் ********************************************************************************************************** சினுங்களுக்கும் கூச்சலிடும்  கண்ணாடி வளையல் சத்தம் போட வாயின்றி தவிக்கும்

சும்மா இருக்க முடியாமல் கிறுக்கியவை

Image
பௌர்ணமி இரவில் வீட்டுக்கு வெளியே வந்துவிடாதே என் தெரியுமா? உன் அழகிற்கு அந்த நிலவும் எதிரியாகிவிடும் உன் நண்பிகளைப் போலவே பாவம் அந்த நிலவு மட்டுமாவது உன் நண்பியாய் இருந்து விட்டு போகட்டும் ********************************************* மீனுக்காக தவமிருக்கும் கொக்கைப் போல உன் sms இற்காக காத்திருக்கும் நான் ********************************************* பெண்ணை நிலவிற்கு ஒப்பிடுபவர்கள் மத்தியில் உன் விடயத்தில் வித்தியாசமானவனாய் நான் ஏனெனில் உன்னுடன் ஒப்பிடும் போது நிலா இரண்டாமிடம் தான் ********************************************* என்னை வரச்சொன்ன நீ உன் வீட்டு முற்றத்தையே முறைத்த வண்ணம் ... நீ காதலிப்பது என்னையா? இல்லை உன் வீட்டு முற்றத்தையா? ********************************************* "நான்" என்பதன் பொருள் "நீ" என நினைத்த எனக்கு "நீ" என்பது "நான்" இல்லை என்பதை நினைக்கத் தெரியவில்லை ********************************************* நீ என்னை விட்டு செ

மாற்றம்

Image
மாற்றம் எல்லோரும் மாறி விட்டனர் அவனும் ,அவளும் ஏன்.. நீயும்,நானும் கூட தான் நண்பனும் மாறி விட்டான் அவன் கேட்கும் கேள்விகளும் மாறி விட்டன நண்பர்களும் மாறிவிட்டனர் அவர்களிடமிருந்து வரும் செய்திகளும் மாறிவிட்டன உறவுகளும் மாறிவிட்டன சுற்றியுள்ள சூழலும் மாறிவிட்டது தம்பி மார்களும் பெரியவர்களாகி தப்பான மாற்றத்திற்குள்ளாகி விட்டனர் ஏன் உயிருள்ளவை மட்டுந்தானா மாறவேண்டும் என்ற கேள்வியுடன் முகப்புத்தகம் கூடத்தான் மாற்றிகொண்டது தன் " chat screen" ஐ இருந்தாலும் சந்தோசம் ஒன்று மட்டும் மாறாமல் அன்று போல் இன்றும் அதுதான் அந்த ஒன்று "மாற்றம் "

கிறுக்கல்கள்

Image
உன் பார்வைகளுக்கு மட்டுமே நான் கெட்டவனாய் -விதி ******************************** என்னை அழவைத்துப் பார்ப்பதில் ஏன் உனக்கு இவ்வளவு இன்பம் -வெங்காயம் ******************************** கண் மூடினால் கனவும் கசக்கிறது உன் நினைவுகளால் ******************************** இருளான இதயத்திற்கு ஒளி கொடுக்க வந்த மெழுகுவர்த்தி என்று தான் எண்ணியிருந்தேன் யாருக்கு தெரியும் என்னையே மழுங்கடிக்கும் எரிமலை குழம்பாய் நீ இருப்பாய் என்று.... ********************************* கன்களும் பொய் சொல்கின்றன உன் விடயத்தில் சந்தோசமாய் இருப்பவனாய் என்னை காட்டி ********************************** முடிந்தால் சொல்லியனுப்பு முடியவே முடியாதென்று உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்
Image
உனக்கெனவென்றொன்று உள்ளது போல எனக்கெனவென்றொன்று வேண்டுமென்ற என் ஆசையில் என்ன தவறை கண்டுவிட்டாய்? எனக்கென நீ எப்போதுமே என்னுடனேயே வேண்டும். நீயும் உனக்கென்றானவனை அப்படித்தான் நினைத்திருந்திருப்பாய் இருந்தும் பலனில்லை ,உன் நினைப்பில் காரணம் உனக்கெனவென நீ நினைவில் வைத்திருக்கும் அவன், அவனுக்கெனவொன்றை தேடிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை அப்போது புரியும் உனக்கு உனக்கெனவே என்று யார் இருப்பான் என்று காத்திருப்பு தொடரும் , அது வரையில்.....

நான்

Image
நான் நான், ஓர் இரண்டெழுத்து உலகம் எனக்குள்ளே பல மனிதப் பரிமாணங்கள் அவற்றிற்கிடையே பல யுத்தங்கள், எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய ஐ.நா சபையாக நான் அதனாலோ என்னவோ, எனக்கே சந்தேகம் என்னைப் பற்றி- நான் நல்லவனா? இல்லை கெட்டவனா? விடை தெரியா கோழி,முட்டை கேள்விகளுள் இதுவும் ஒன்று என்ன செய்ய விடை காணும் கடப்பாடு என்னிடம் மட்டுமே- காரணம், கேள்வியும், விடையும் எனதே ! நான் இப்படித்தான் என்பதில், எனக்கு உறுதி கண்டிப்பாக முகம் தெரியா அந்த நான்கு பேருக்காய் வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனாலோ என்னவோ பலருக்கு நானொரு கேள்விக்குறி! வேதனை, மிக நெருக்கமானவர்களுக்கும் இதே கேள்வி இருப்பது. வெளிப்படையாய் வாழ்வதில் அப்படியென்ன தவறை கண்டுவிட்டார்கள்? எப்படியும் வாழலாம் என்பதிலும், எனக்கு உடன்பாடில்லை போகிற போக்கில் அடிபட்டு செல்லவும் பிடிப்பில்லை அவற்றை தடைதாண்ட நினைத்தாலும்- என்னை விடுவாரில்லை. என்ன செய்ய அப்பாவி இவன்? சில பழக்கங்கள் , அதுவும் என்னை ஏன் அடுத்தவரையும் பாதிக்காதவை என்னிடத்தில் செய்யவும் நாட்டமில்லாமல் ,விடுவதற்கும் மனமில்லாமல், இருகால் தோணியில் சவாரி செய்யும் கிறுக்கனாய் நான் இறைவன் நாடினால்,

நன்பா !!!! வேண்டாம் இந்த அவலம்

Image
நன்பன் புகையிலையுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால், அவனுக்கு புத்திமதி சொல்ல முடியாமலும், ஏதாவது செய்து கொள்ள முடியாமலும் தவிக்கும் உங்களைப் போன்றதொரு நன்பன் இவன். நன்பா !!!! வேண்டாம் இந்த அவலம் என் ஆருயிர் நன்பனே உன் மேல் எந்த கோபமுமில்லை கோபமெல்லாம் உன் இரு விரல் நடுவே புதிதாய் வந்து சேர்ந்த மூன்றாம் முட்டாளுடன் தான் ஆம், அந்த "சிகரெட்" உடன் தான். எங்கிருந்தான் இவ்வளவு நாளாய் அவன் நீ துவண்டிருந்த போது வராதவன் நீ படிக்க கஷ்டப்படும் போது வராதவன் உன் பிரச்சினைகளில் பங்கெடுக்காதவன் திடீரென உன்னிடம் வருவதில் என்ன நியாயம் ? சிகரெட் உடலுக்கு கேடு, சமூகத்துக்கும் கேடு, அதற்கு மேல் மார்க்கத்தில் அனுமதியே இல்லை என்பதும், உனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் சும்மா இருக்க முடியவில்லைஎன்னால்........ "மூளையின் அளவு, வாயிலுள்ளதின் அளவு" என்று ஊர் முழுவதும்சுவரொட்டி அடித்தாலும் உன் நெஞ்சுக்கு படாது என்பதில் எனக்கு நிச்சயம் ஆம், இப்போ அந்த நெஞ்சேபழுதாகிவிட்டது என்பது வேறு கதை. நானும் உன்னிடம் சொல்ல பயப்பட்டேன் எங்கே நட்பு கேள்விக்குறியாகி விடுமோ? என்பதால் &q

அந்த ஒரு கணம்

Image
அந்த ஒரு கணம் பரபரப்பான அந்த காலையில் நேரமோ ஒரு ஏழு இருக்கும் office வேலைகள் ஒவ்வொன்றாக ஒரு presentation ஒரு discussion ஒரு filed visit ஒரு interview என எல்லாமே அவன் கண் முன் தோன்ற அவனோ யார் யாரையோ அநியாயத்திற்கு திட்டியபடி பலதோடு ஒன்றாக காலி வீதியில் தனிமையில் காரை செலுத்தும் ஜீவன், தற்போதைக்கு தனிமரம் இரண்டு மூன்று நாட்களாக கவனிப்பாரற்றவனாய் வயிற்றைக் கூட நிரப்ப மறந்தவனாய் எது செய்வதென்று அறியாமல் பேதலித்தவனாய் ஆயிரம் கற்பனைகளோடு ஒரு வேற்று கிரகத்திலே வாழ்க்கையை ஓட்டியவனாய் காரணம் ஏனோ? தலைப் பிள்ளையைப் பெற்றெடுக்கும் பிரயாச்சித்தத்தில் அவன் மனைவி ஆஸ்பத்திரியில் இதற்கிடையே காருக்கு கட்ட வேண்டிய leasing ஒரு பக்கம் உயிர் நண்பனுக்கு பணவுதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் அடுத்த மாதம் மணவாழ்க்கையில் இணையப்போகும் தங்கை ஒரு பக்கம் பிள்ளையின் ஏழாம் நாளை விமர்சையாக கொண்டாட வேண்டுமென்ற தம்பதியினது அவா ஒரு பக்கமென பற்பல பணச்சுமைகளை சுமந்தவனாய் அவன் இபடியே நினைத்துக்கொண்டே செல்லும் அவனை யாரோ தடுத்து நிருத்தியதை அவனும் உணரவே திடுக்கிட்டு நினைவுக்கு வரவே சுற்றும் பார்க்க அலரியபடி நின்றது அவனது
Image
ஏன் இந்த கொடுமை???? அதை நினைக்கையிலே............ தலை சுற்றுகிறது மூளை சிந்திக்க மறுக்கிறது கண்களோ இமைகளையும் சேர்த்து மூடிக் கொள்கின்றன உள்ளமோ விரும்ப மறுக்கிறது நரம்புகள் பின்னிப் பிணைகின்றன இதயத் துடிப்பு அதிகரிக்கவே இரத்த ஓட்டம் ஆர்முடுகளடைகின்றது வேதனைகள் உணரப்படுவதோடு சோதனைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன கால்களோ நடக்க சோம்பல் படுகின்றன மொத்தத்தில் முழு உடலும் செயற்பட மறுக்கிறது....... போதாக்குறைக்கு இயற்கையும் சில தடைகளுடன் விளையாடுகின்றன என்னுடன்...... ஏன் இத்தனை சிக்கல்கள் நாளை மறுநாள் மறுபடியும் ஆரம்பிப்பதாலோ...................
Tamil கொலையா? இல்லை ஆங்கில murder ஆ? மடிக்கணனியயை இயங்கசெய்தவுடன் தொடங்கு திரை இல் இரு வேரு தெரிவுகளில் ஒன்றான நுண்மென் ஜன்னல்கள் 7 ஐ இயக்கி எனது பாவிப்பான் பெயரை தெரிவுசெய்து வழி சொல் ஐ கொடுக்கவே இயங்கத் தொடங்கியது என் கணனி முதலில் ஓரிரு காரியாலய வேலைகள் செய்யும் நோக்கில் நுண் மென் காரியாலயம் 2007 ஐ திறந்து முதலில் நுண் மென் வார்த்தை 2007, அதிலொரு ஆவணம் பின் நுண்மென் வலுப் புள்ளி 2007 இல் ஒரு ப்ரெஸென்டடிஒன் அத்தோடு நின்றுவிடாமல் நுண்மென் வழி, நுண்மென் தகவல் பாதை, நுண்மென் ஒரு குறிப்பு மற்றும் வெளிப்பார்வையையும் இயக்கி விட்டு என் கண் சென்றது இணைய கண்டுபிடிப்பான் ஐ நோக்கி முதலில் ஜி-அஞ்சல் சென்று நோட்டமிட்டு அதன் பின் சென்றேன் வதனப் புத்தகம் தளத்திற்கு அதிலே விமர்சனங்களுக்கு பதில் எழுதி விட்டு இருந்த ஓரிருவரிடம் வீன் பேச்சு பேசி விட்டு அப்படியே புதிதாய் ஒரு ஜன்னலில் எனது வெற்றிடம் சென்றேன் வெரிச்சோடியிருந்த அதை விட்டும் விலகினேன் நான் பின் பதிவுதளம் செல்லும் முயற்சியில் தோற்றுப் போய் நெருப்பு நரி வலைத் தேடுவான் ஐ நாடினேன் நான் அதிலே வெற்றி பெறவே பதிவையும் மேற்கொண்டு உடனே