Posts

Showing posts with the label சில நிமிடம் - பல கதைகள்
Image
சில வரிக் கதைகள் - 1 சீதனம்? "இந்த சீதனம் எனும் பிச்சை எடுக்கும் பிழைப்பு எனக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் மகளை கட்டிய புடவையுடன் அனுப்பி வைத்தாலே போதும். உங்கள் மகளை ராணி மாதிரி வைத்துக்கொள்வேன்". என்று தொலைக்காட்சி தொடர்கதையில் நாயகன் ,நாயகியின் அப்பாவிடம் சொன்னதுமே மாலாவுக்கு ஒரே சந்தோசம். மாலா சீதனக் கொடுமையால் திருமனமாகாமல் 35 வயதை தாண்டியிருக்கும் ஏழைப் பெண். பொய் வேஷம் பெண் என்றால் பேய் பெண்ணே உலகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் பெண்ணில்லாத உலகே என் கனவுலகு என எவ்வாறெல்லாம் பெண்ணை (வர்ணிக்க?) முடியுமோ அப்படியெல்லாம் கவிதை பாடிய தொழில்முறை கவிஞன் திடீரென மௌனியானான் , வார்த்தைகள் வராமல், அவன் முன்னால் அவனது அழகிய புதிதாய் திருமனம் முடித்த அவன் மனைவி தேனீருடன்....... மாற்றம் !! குடிக்கிறான்.........குடிக்கிறான்.......அவனால் முடியவில்லை அவனை விட்டு பிரிந்து சென்ற அவளை மறக்க. ஞாபகச் சுமைகளை மீட்டுகிறான் அவன். இனிமையான அவன் இளமை வேட்டு வைக்கப்பட்டதை தான் அவனால் பொறுக்க முடியவில்லை.அவள் மேல் உள்ள கோபமோ அவளை கண்டாலே கொன்றுவிடுமளவுக்கு. அவளை எப்படியும் பழி வாங்கி விடும்