Posts

Showing posts with the label வலிகொண்ட இதயம் - காதல் கவிதைகள்
Image
என் தனிமைக்கு தோள் கொடுக்கும் அறைத் தோழன் -உன் நினைவுகள் பாழடைந்த என் இதயத்தின் கதவுகள் சாவி இல்லாமலே திறக்கப்பட்டன உன் புன்னகையால் முடிந்தால் சொல்லியனுப்பு முடியவே முடியாதென்று உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் மறுக்காமல் நீ வேண்டுமெனக்கு ஏனெனில் ஒருக்காலும் மறுகாதல் சறுக்காமல் போகாது. கன்களும் பொய் சொல்கின்றன உன் விடயத்தில் சந்தோசமாய் இருப்பவனாய் என்னை காட்டி வெறுங்கையோடு வந்த நீ செல்கிறாய் என் இதயத்துடன் அனுமதியின்றி அதை பரித்தவளாய்
முதல் சந்திப்பு நம் உதடுகள் மௌனித்தாலும் கண்கள் கைத்தட்சிட்டன இதயப் பரிமாற்று ஒப்பந்தத்தில் இரவு சூரியன் கூட ஓய்வில் ஆனால் சதா உன்னை நினைத்த வண்ணம் என் இதயம் நிஜம் நீ அழ்கானவள் என்பதற்காய். நான் உன்னை காதலிக்கவில்லை நான் காதலிப்பதால் என்னவோ நீ எனக்கு அழகாய் தெரிகிறாய் நிறம் வெண்சிரிப்பு, செவ்வாய், கருவிழி, மஞ்சள் கண்ணம் அறிந்தேன் நிறங்களை உன்னில் ஒப்புவமை பெண்ணை நிலவென்றது அன்று இன்றோ நானொரு புது முயற்சியில் நிலவை உனக்கு ஒப்பித்துட ! பாவம் நான் உள்ளுக்குள்ளே செத்துப் பிழைத்தேன் நான் பதிலுக்காய் காத்திருந்த காலங்களில் வேண்டாம் ! வார்த்தைகளை அள்ளி வீசாதே எனக்கும் உண்டு உனக்கு உள்ளது போல இதயமொன்று !
உண்மை என் மீதி வாழ்வு இதயத்தின் ஓரத்தில் வாழும் உன் நினைவுகளில் மாயம் வந்தாய் அதே போல சென்றாய் இடைவெளிக்குள் இதென்ன புதிதாய்? ஏமாற்றம் முகவுரை என எண்ணிய எனக்கு முடிவுரை எழுதியது உன் மூன்று வர்த்தை பதில் ஐயோ ! தொந்தரவு வேண்டாம் என்று சென்றாய் நீயும், ஆனால் இன்றுவரை தொந்தரவு செய்யப்படுகிறேன் நான் ஏக்கம் அடிக்கடி பார்க்காவிடினும் பார்க்கும் ஒரு முறையாவது புன்னகையுடன் பார் !!!! நீ இருட்டிலிருந்த இதயத்தை ஒளியேற்றிய மெழுகுவர்த்தி ஏமாற்றம் பாவம் பட்டாம்பூச்சி கூட ஏமார்ந்து போனது பூவென உன்னை எண்ணி