Posts

Showing posts with the label ஹைக்கூ- சிதறும் எண்ணங்கள்
ஹைக்கூ - 1 மறக்கத் தெரியா மானிடனின் நொண்டிச் சாட்டு - நினைவு - தோல்வியடைந்தவன் போட்ட பிச்சை - வெற்றி - பெண்களுக்கே உரியதென்றாலும் வித்தியாசமாய் உன்னிடம் - நாணம் - மாறியது என் இதயம் வெள்ளைத் தாளாய் உன் வருகையால் இணைய முடியா உதயமும் அஸ்தமனமுமாய் - நீயும், நானும் - உணர்ந்தேன் அனைத்திலும் உன் பதிலுக்காய் காத்திருக்கையில் - வெறுப்பு - கண் மூடினால் கனவும் கசக்கிறது உன் நுனைவுகளால் அரசியல்வாதிக்கு குழந்தை பிறந்தது வாழ்க ! வாழ்க ! என்றவாறு குடிகாரன் பேச்சாய் போகும் சொல் வீச்சுகள் - அரசியல் வாக்குறுதிகள் - என்னை பொய்யாக்கிய, மெய் - நீ - என் பேனா கூட மறுக்கிறது உன்னை நினைக்க ! எம் பிரிவால் வீணாய் சிக்கித் தவிக்கின்றன - நம் இதயங்கள் - பார்வைகள் இல்லாவிட்டாலும் நாமும் காதலிப்போம் நம்பிக்கையால்....