Posts

Showing posts from November, 2010

நான்

Image
நான் நான், ஓர் இரண்டெழுத்து உலகம் எனக்குள்ளே பல மனிதப் பரிமாணங்கள் அவற்றிற்கிடையே பல யுத்தங்கள், எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய ஐ.நா சபையாக நான் அதனாலோ என்னவோ, எனக்கே சந்தேகம் என்னைப் பற்றி- நான் நல்லவனா? இல்லை கெட்டவனா? விடை தெரியா கோழி,முட்டை கேள்விகளுள் இதுவும் ஒன்று என்ன செய்ய விடை காணும் கடப்பாடு என்னிடம் மட்டுமே- காரணம், கேள்வியும், விடையும் எனதே ! நான் இப்படித்தான் என்பதில், எனக்கு உறுதி கண்டிப்பாக முகம் தெரியா அந்த நான்கு பேருக்காய் வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனாலோ என்னவோ பலருக்கு நானொரு கேள்விக்குறி! வேதனை, மிக நெருக்கமானவர்களுக்கும் இதே கேள்வி இருப்பது. வெளிப்படையாய் வாழ்வதில் அப்படியென்ன தவறை கண்டுவிட்டார்கள்? எப்படியும் வாழலாம் என்பதிலும், எனக்கு உடன்பாடில்லை போகிற போக்கில் அடிபட்டு செல்லவும் பிடிப்பில்லை அவற்றை தடைதாண்ட நினைத்தாலும்- என்னை விடுவாரில்லை. என்ன செய்ய அப்பாவி இவன்? சில பழக்கங்கள் , அதுவும் என்னை ஏன் அடுத்தவரையும் பாதிக்காதவை என்னிடத்தில் செய்யவும் நாட்டமில்லாமல் ,விடுவதற்கும் மனமில்லாமல், இருகால் தோணியில் சவாரி செய்யும் கிறுக்கனாய் நான் இறைவன் நாடினால், ...

3G ஓர் அறிமுகம்

Image
3G ஓர் அறிமுகம் செல்லிடப் பேசி என்பது தற்போதைய காலத்தில் பலருக்கு உணவு,உடை,உறையுள் என்கிற மூன்று அத்தியாவசியத் தேவைகளுடன் நாங்காவதாக புதிதாய் சேர்ந்து விட்டது என்றாலும் மிகையில்லை. சில வருடங்களுக்கு முன்னால் மட்டும், அழைப்புக்கும், குறுஞ்செய்திக்கும் மட்டுமே செல்லிடப்பேசி ,என்ற நிலை மாறி இன்று மட்டும் அது 3G மற்றும் அதையும் தாண்டிய அளவில் மு ன்னேற்றம் கண்டுள்ளதென்பது, எம் கண்களுக்கு புலப்பட்ட ஒரு அபரிவிதமான வளர்சியே. 3G தொழில்னுட்பம் என்பது, தற்போதைய பயன்பாட்டில் சந்து, பொந்து எல்லாம் வேர் விட்டு வளர்ந்துள்லது என கூற முடியாவிட் டாலும் , கிராமம் வரை விஸ்தீரனமாயுள்ளது என்பது கண்கூடு. 3G என்றால் என்ன? அவற்றின் பயண்பாடுகள் என்ன? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.(lite ஆ பார்ப்போம்) GSM, EDGE, CDMA, Wi-Max என்பவற்றோடு மற்று ம் பல தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். 2G மற்றும் 2.5G சேவைகளை ஒப்பிடும் போது, 3G சேவையானது குரலொலி (voice) மற்றும் தரவு சேவைகள் (data services) ஆ கிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில்(data transferring rate) எச்எஸ்பி...