3G ஓர் அறிமுகம்

3G ஓர் அறிமுகம்
செல்லிடப் பேசி என்பது தற்போதைய காலத்தில் பலருக்கு உணவு,உடை,உறையுள் என்கிற மூன்று அத்தியாவசியத் தேவைகளுடன் நாங்காவதாக புதிதாய் சேர்ந்து விட்டது என்றாலும் மிகையில்லை. சில வருடங்களுக்கு முன்னால் மட்டும், அழைப்புக்கும், குறுஞ்செய்திக்கும் மட்டுமே செல்லிடப்பேசி ,என்ற நிலை மாறி இன்று மட்டும் அது 3G மற்றும் அதையும் தாண்டிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதென்பது, எம் கண்களுக்கு புலப்பட்ட ஒரு அபரிவிதமான வளர்சியே.
3G தொழில்னுட்பம் என்பது, தற்போதைய பயன்பாட்டில் சந்து, பொந்து எல்லாம் வேர் விட்டு வளர்ந்துள்லது என கூற முடியாவிட்டாலும், கிராமம் வரை விஸ்தீரனமாயுள்ளது என்பது கண்கூடு. 3G என்றால் என்ன? அவற்றின் பயண்பாடுகள் என்ன? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.(lite ஆ பார்ப்போம்)
GSM, EDGE, CDMA, Wi-Max என்பவற்றோடு மற்றும் பல தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். 2G மற்றும் 2.5G சேவைகளை ஒப்பிடும் போது, 3G சேவையானது குரலொலி (voice) மற்றும் தரவு சேவைகள் (data services) ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில்(data transferring rate) எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் (broad band) பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள், பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3G வலையமைப்புகள் உதவுகின்றன. அதற்கு மேலதிகமாக video conferrencing, web browsing போன்ற பல சேவைகளையும் இது வழங்குகிறது. அதே போல் தற்போது இலங்கையில் பாவனையில் இல்லாத IPTV (TV இனூடான இணைய இணைப்பு) சேவையும் 3G மூலம் கிடைக்கப் பெறும் இன்னுமொரு சேவையாகும்.
3G என்பது (3rd Generation) மூன்றாவது தலைமுறையை குறிக்கும். தகவல் பரிமாற்றத்தின் அறிமுகம் 0 வது தலைமுறையுடன் ஆரம்பமானது. நம்மில் பலர் 3G என்றதும் விளங்கிக் கொண்டிருப்பது "video call" என்பதை மட்டுமே. ஆனால் 3G இன் மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்து பல நூறு மீட்டர் வரையும் மிக வேகமான தகவல் பறிமாற்றத்தில் ஈடுபடலாம். தலைமுறையோடிணைந்த தொழிநுட்ப வளர்சியை கீழே காணலாம்.
0G
ரேடியோ தொலைப்பேசி
1G
voice calls, sms
2G(2.5G , 2.75G)
mms - புகைப்படங்கள் அனுப்ப
GPRS -இணைய இணைப்பு
CDMA ( Code Division Multiple Access)
3G(3.5G ,3.9G)
HSDPA (High-Speed Downlink Packet Access)
W-CDMA
Mobile Wi-Max
4G
Wi-Max ...............
*குறிப்பு:பல சேவைகள் குறிப்பிடப்படவில்லை(பிரபல்யம் அற்ற காரணத்தால்)
* GPRS- General Packet Radio Service
3G இன் மூலம் globel roaming என்றொரு முறை உள்ளது. அது அந்தளவுக்கு பிரபல்யம் அற்றதென்றாலும் எதிர்காலத்தில் பயனுடையது எனலாம். அதனூடாக IP Address இன் உதவியால் உலகின் எந்த இடத்திற்கும் தகவல் பரிமார்றம் செய்யலாம். உலகளவில் 3G சேவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, 3G சேவை அளிப்போர்களுக்கும், பயனர்களுக்கும் சில குறைபாடுகள் இருக்கின்றன:
1. சில சட்டமுறைகளில் 3G சேவை உரிமங்களுக்கான அதிகளவிலான உள்ளீட்டு கட்டணங்கள்
2. நாடுகளுக்கு இடையிலான உரிம முறைகளில் இருக்கும் வேறுபாடுகள்
3. சில தொலைதொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடன் அளவு, இதனால் 3G முதலீட்டிற்கு சிரமமாக இருக்கும்
4. பிரச்சனையில் இருக்கும் ஆப்பரேட்டர்களுக்கு அரசு உதவி இல்லாமல் இருப்பது
5. 3G தொலைப்பேசிகளின்விலை
6. பல பகுதிகளில் இணைப்பு(coverage) இல்லாமல் இருப்பது
7. கையடக்க சாதனத்தில் அகல வரிசை(broad band) சேவைகளின் தேவை
இலங்கையில் 3G என்பது நகரப் பிரதேசங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது இலங்கையில் மொபைல் சேவை வழங்கும் 5 நிறுவனங்கள் உள்ள போதும் 3G சேவை வழங்குநர்கள் அவற்றில் மூவர் மட்டுமே. அதே போல 3G இலுள்ள வேகத்தின்(speed) காரணமாக தரவுகள் அடைப்பட (struck ஆக) வாய்ப்புகள் உள்ளது. 3G இன் வளர்சிக்காக இது போன்ற குறைப்பாடுகள் நிவர்த்திக்கப் பட வேண்டும்.
3G தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அணுகவும்:
http://en.wikipedia.org/wiki/3G
Comments
Post a Comment