எதுசரி.... ஏதாவது.... நீங்களே சொல்லுங்களே....

கணவன் மனைவியிடையே நடக்கும் வழமையான சம்பாஷனைகளில் முக்கியமாக, suggestions அதிகமாக கேட்கப்படுவதுண்டு. அது என்னமோ தெரியவில்லை suggestions என்பது கணவன் மட்டுமே கே ட்க வேண்டிய கட்டாய நிலை உருவாகி விட்டது. இங்கே உள்ள சம்பாஷனைகளும் சாதரணமாக நடைபெறுவன், ஆனால் மனைவியின் ஆச்சரியமான பதில்களை பார்க்கும் போது ஏன் தான் கேட்டோமோ? என தோன்றும். எதுசரி.... கணவன் : இண்டக்கி dinner க்கு என்ன எடுப்போம்? மனைவி : எதுசரி.... கணவன் : pizza எடுத்தா என்ன? மனைவி : ஐயோ வேணாம், போன முறை எனக்கு முகம் எல்லாம் pimples வந்தது மறந்துட்டீங்களா? அது alergic கணவன் : அப்போ... நூட்ல்ஸ் எப்புடி? மனைவி : ஏன்பா........ அது சுத்த bore... கணவன் : அப்போ நாங்க இப்பிடி செய்வோம்..... எங்கேயாவது வெளிய போவோமா? மனைவி : never.. நாளைக்கி நேரத்தோடவே office போக வேணும். கணவன் : அப்ப சரி நீங்க ஏதாவது suggest பண்ணுங்க மனைவி : எதுசரி...... கணவன் : !!!!!!!! ஏதாவது..... கணவன் : இப்ப நாங்க என்ன செய்வோம்? மனைவி : ஏதாவது..... கணவன் : ஒரு film பார்ப்போமா? வெகு நாளாச்சு film ஒன்று பார்த்து.... ம...