எதுசரி.... ஏதாவது.... நீங்களே சொல்லுங்களே....
கணவன் மனைவியிடையே நடக்கும் வழமையான சம்பாஷனைகளில் முக்கியமாக, suggestions அதிகமாக கேட்கப்படுவதுண்டு. அது என்னமோ தெரியவில்லை suggestions என்பது கணவன் மட்டுமே கேட்க வேண்டிய கட்டாய நிலை உருவாகி விட்டது. இங்கே உள்ள சம்பாஷனைகளும் சாதரணமாக நடைபெறுவன், ஆனால் மனைவியின் ஆச்சரியமான பதில்களை பார்க்கும் போது ஏன் தான் கேட்டோமோ? என தோன்றும்.
எதுசரி....
கணவன் : இண்டக்கி dinner க்கு என்ன எடுப்போம்?
மனைவி : எதுசரி....
கணவன் : pizza எடுத்தா என்ன?
மனைவி : ஐயோ வேணாம், போன முறை எனக்கு முகம் எல்லாம் pimples வந்தது மறந்துட்டீங்களா? அது alergic
கணவன் : அப்போ... நூட்ல்ஸ் எப்புடி?
மனைவி : ஏன்பா........ அது சுத்த bore...
கணவன் : அப்போ நாங்க இப்பிடி செய்வோம்..... எங்கேயாவது வெளிய போவோமா?
மனைவி : never.. நாளைக்கி நேரத்தோடவே office போக வேணும்.
கணவன் : அப்ப சரி நீங்க ஏதாவது suggest பண்ணுங்க
மனைவி : எதுசரி......
கணவன் : !!!!!!!!
ஏதாவது.....
கணவன் : இப்ப நாங்க என்ன செய்வோம்?
மனைவி : ஏதாவது.....
கணவன் : ஒரு film பார்ப்போமா? வெகு நாளாச்சு film ஒன்று பார்த்து....
மனைவி : படமா? அது சுத்த time waste.
கணவன் : அப்ப... ஒரு walk போய்ட்டு வந்தா என்ன?
மனைவி : walk? இத மாதிரி ஒரு hot ஆன நாள்ள....
கணவன் : then,ஒரு drive போய்ட்டு ஒரு coffee shop க்கும்
போய்ட்டு வருவோமா?
மனைவி :caffeine உடம்புக்கு நல்லதில்ல எண்டு சொல்லி இருக்குறார்..
கணவன் : அப்போ நீங்க ஏதாவது suggest பண்ணுங்களே...
மனைவி : ஏதாவது....
கணவன் : !!!!!!!!!!!!!!
நீங்களே சொல்லுங்களே.....
கணவன் :Then, எப்பிடி வீட்டுக்கு போறது?
மனைவி : நீங்களே சொல்லுங்களே....
கணவன் : ஒரு bus ல ஏரி போவோமா? bus ல போய் கண காலம் ஆகுது....
மனைவி : bus ? இந்த நேரத்திலயா? அது ரொம்ப crowd & dirty பா..
கணவன் : அப்போ... ஒரு cab service க்கு call பண்ணுவோ
மா?
மனைவி : cab? அதுவும் இந்த short distanceக்கு...
கணவன் : அப்பிடீன்னா நாங்க சின்ன walk ஒண்டு போவோம். Because, climate உம் உங்களுக்கு புடிச்ச மாதிரியே இருக்கு....
மனைவி : எனக்கு ரொம்ப பசிக்குது, என்னால முடியாது நடக்க.. அதுவும் வீடு வரைக்கும்...
கணவன் : அப்பிடீன்னா நாங்க dinner எடுத்துடு போவோமே...
மனைவி : எதுசரி......
கணவன் : நாங்க என்ன சாப்பிடுவோம்?
மனைவி : ஏதாவது......
கணவன் : !!!!!!!!!!!!
இது சிரிப்பிற்காக சொல்லப்பட்டது என்னினும் சிந்திப்பவர்களுக்கு இதில் நிறையவே சிந்திக்க உள்ளது. எனினும் பலரது நிலமை இவ்வாறு தான் ஓடிக் கொண்டிருக்கிறது.....
NB: இது ஆங்கிலத்தில் படித்து சுவைத்தது, சில மாற்றங்களுடன் edit செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment