கிரிக்கற் + binary topic
நன்பா.....கிரிக்கற் விளையாட்டு தான் எனினும் நமக்கு வினையாகி விடுமோ என்ற பயத்தில் எழுத நினைக்கின்றேன் ஏன் அது நம் நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட முட்டாள்களை காண முடிகிறது ஒரு நாட்டுக்குள்ளேயே எத்தனை விதமான supporters உன்வீட்டில் நீ அடிபடும் போது பக்கத்து வீட்டுக்காரன் பட்டாசு போட்டு சந்தோசமாய் இருப்பதை விரும்புபவனாக நீ இருந்தால் உன் செயலில் ஓரளவு நியாயத்தை காணலாம்...... ஆனாலும் எந்த காரணமுமின்றி நீ இப்படி ஜாஹிலியத்தனமாய் இருப்பதை ஏற்க மனம் விரும்பவில்லை. நீயாகவே உன் மனதில் கை வைத்து கேள் நீ செய்வது சரியா என்று நாம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் கிடைக்காத உரிமைகள் உனக்கு இங்கே கிடைன்றதென்பதை நீ சிந்திப்பதே இல்லையா? உனக்கென்றொரு சட்டம், உனக்கென்றொரு நீதிமன்றம் உனக்கென்றொரு மையவாடி ஏன் ஐந்து நேரமும் தொழுகைக்கு பாங்கு ஒலிப்பது என்று அடுக்கிக் கொண்டே போகலாம் கேட்டால் சொல்கிறாய் "அவன் துவே_ம்" என்று உனக்கு உன் மண் மேல் பற்று இல்லை என்று அவனுக்கு தெரிந்ததும் அவனில் ஏற்படும் பொறாமை தான் உனக்கு அதுவாக தெறிகிறது போலும் ...