தொட்டும் தொடாமலும்

// பெண் பெண் என்றால் பேயிறங்கிய காலம் மலையேறிப்பாய், இப்போது "கிரீஸ் பேய்" என்றால் பெண்ணே இறங்க வேண்டிய காலமிது.விடயம் அதுவல்ல.பெண் என்றதும் சாதாரண மெக்கானிக் முதல் மிகப் பெரும் அதிகாரி வரை ஒரே முறையாகத் தான் அவதானிக்கப்படுகிறாள். என்ன மெக்கானிக் இயல்பாக பார்க்கிறான் ஆனால் அதிகாரியோ இயல்பை மீறி நாசூக்காய் பார்க்கிறான். கடைசியில் இயல்பை மீறியவன் நல்லவன் என்றும் இயல்பானவன் கெட்டவன் என்றும் பெயர் பெறுகிறான். இந்தப் பெயரை சூட்டுவதும் அதே தாய்குலம் தான்.இதையெல்லாம் தாண்டி பெண்ணை தாயாக அல்லது சகோதரியாக அதுவும் இயல்பாகப் பார்ப்பதில் தான் நிச்சய வெற்றி மனிதனுக்கு கிடைக்கும். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- // பிரச்சினை பிரச்சினை பிரச்சினை பிரச்சினை.எங்கு பார்த்தாலும் இதே சொல் தான் தாரக மந்திரமாய் ஒழித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில் மனிதனாய் பிறந்ததுமே பிரச்சினைகளும் கூடவே பிறக்கின்றன. உலகத்தில் யாருக்கு தான் பிரச்சினை இல்லை. நாட்டாமை தொட்டு நாட்டை...