தொட்டும் தொடாமலும்
பெண் என்றால் பேயிறங்கிய காலம் மலையேறிப்பாய், இப்போது "கிரீஸ் பேய்" என்றால் பெண்ணே இறங்க வேண்டிய காலமிது.விடயம் அதுவல்ல.பெண் என்றதும் சாதாரண மெக்கானிக் முதல் மிகப் பெரும் அதிகாரி வரை ஒரே முறையாகத் தான் அவதானிக்கப்படுகிறாள். என்ன மெக்கானிக் இயல்பாக பார்க்கிறான் ஆனால் அதிகாரியோ இயல்பை மீறி நாசூக்காய் பார்க்கிறான். கடைசியில் இயல்பை மீறியவன் நல்லவன் என்றும் இயல்பானவன் கெட்டவன் என்றும் பெயர் பெறுகிறான். இந்தப் பெயரை சூட்டுவதும் அதே தாய்குலம் தான்.இதையெல்லாம் தாண்டி பெண்ணை தாயாக அல்லது சகோதரியாக அதுவும் இயல்பாகப் பார்ப்பதில் தான் நிச்சய வெற்றி மனிதனுக்கு கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
// பிரச்சினை
பிரச்சினை பிரச்சினை பிரச்சினை.எங்கு பார்த்தாலும் இதே சொல் தான் தாரக மந்திரமாய் ஒழித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில் மனிதனாய் பிறந்ததுமே பிரச்சினைகளும் கூடவே பிறக்கின்றன. உலகத்தில் யாருக்கு தான் பிரச்சினை இல்லை. நாட்டாமை தொட்டு நாட்டை ஆளும் ஒபாமா வரைக்கும் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. பொதுவாக பணம் இல்லாவிட்டால் தான் பிரச்சினை என்றால் பணம் வந்ததும் அதை விட பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. பிரச்சினைகள் அற்ற மனிதன் என்பவன் முடிவிலியில் வழ்பவனாய் தான் இருக்க வேண்டும். அதாவது
"A person without any problem doesn't exist anymore."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
// கடைக்குட்டி
பொதுவாக கடைசி பிள்ளை தான் செல்லக்கட்டி, கடைக்குட்டி என்றும் ; தலைப்பிள்ளை என்றால் பொறுப்புள்ளவன் என்றும் சொல்லப்படுவதுண்டு. அது உண்மையானாலும் கூட சில நேரங்களில் கடைக்குட்டியாக பிறந்தது வெறுக்குமளவுக்கு செல்லவும் கூடும். உதாரணத்திற்கு கடைக்குப் போவதிலிருந்து கறிவேப்பில்லை ஆய்வது வரை கடைக்குட்டி தான் செய்ய வேண்டி இருக்கும். இதை விளையாட்டாய் சொல்ல வரவில்லை , நானே அநுபவித்த கறை படிந்த சரித்திரங்களின் வாயிலாகவே இத்தகவல் பரிமாறப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
// ஆசிய கிரிக்கட்டும் நாளையும்
ஆசிய கிரிக்கேட்டுக்கே இந்த சில மாதங்கள் நன்றாகவே அமையவில்லை . முதலில் துவக்கி வைத்தது இலங்கை. இங்கிலாந்து சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியுற்று நாடு திரும்பி இப்போது அவுஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரையும் பரிகொடுத்தாயிற்று. நல்ல வேளை இருபதுக்கு இருபது தொடர்களை இரு நாடுகளுக்கும் எதிராக வென்றது. இல்லா விட்டால் மானம் போயிருக்கும்.
இது கூட பரவாயில்லை தம்பட்டம் அடித்து திரியும் இலங்கையின் அண்ணன் இந்தியா இங்கிலாத்திடம் படு தோல்வியுற்று வெள்ளைச் சலவை(white wash) செய்யப்படுமளவுக்கு வந்ததோடு மட்டும் நின்று விடாமல் வெகு நாட்கள் வைத்துக்கொண்டிருந்த No:1 Test Team இடத்தையும் இங்கிலாந்துக்கு வாரி வழங்கி விட்டது.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பாகிஸ்தானிலும் Afridi நீக்கப்பட்டது , மறுபடியும் ஊழல் புகார் மிக்க Shoaib Malik ஐ தலைவராக நியமிக்கப்பட இருப்பது ,Waqar Younis பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தது என்று பல பல பிரச்சினைகள்.அவர் மருத்துவ நோக்கம் கருதி விலகுவதாக கூறியிருந்தாலும் உட்பூசளால் தான் விலகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது எல்லாம் பரவாயில்லை என்றாலும் பங்களதேசத்துக்கு நிகழ்ந்தது தான் கொடுமை. சிம்பாப்வே அணி தன் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
சிவாஜி ஸ்டைல்ல சொல்றதுன்னா
"அண்ணனுக்கு அடி விழுந்தால் தம்பியிடம் போகலாம் . தம்பிக்கு அடி விழுந்தால் அண்ணனிடம் போகலாம் .இப்படி அண்ணன் , தம்பி எல்லோருக்குமே ஒரே நேரத்துல அடி மேல அடி விழுந்தா நாங்க எல்லாம் எங்க போவது.?? எங்க போவது ???"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Lucky 21 Casino (New Orleans) - MapyRO
ReplyDeleteGet directions, reviews 천안 출장샵 and information for Lucky 21 울산광역 출장안마 Casino (New Orleans) in 경기도 출장마사지 New 김천 출장안마 Orleans, LA. Find 경상남도 출장마사지 nearby hotels with information.