ஹைக்கூ - 1


மறக்கத் தெரியா
மானிடனின்
நொண்டிச் சாட்டு
- நினைவு -

தோல்வியடைந்தவன்
போட்ட பிச்சை
- வெற்றி -

பெண்களுக்கே
உரியதென்றாலும்
வித்தியாசமாய் உன்னிடம்
- நாணம் -

மாறியது
என் இதயம்
வெள்ளைத் தாளாய்
உன் வருகையால்

இணைய முடியா
உதயமும்
அஸ்தமனமுமாய்
- நீயும், நானும் -

உணர்ந்தேன் அனைத்திலும்
உன் பதிலுக்காய்
காத்திருக்கையில்
- வெறுப்பு -

கண் மூடினால்
கனவும் கசக்கிறது
உன் நுனைவுகளால்

அரசியல்வாதிக்கு
குழந்தை பிறந்தது
வாழ்க ! வாழ்க ! என்றவாறு

குடிகாரன் பேச்சாய்
போகும் சொல் வீச்சுகள்
- அரசியல் வாக்குறுதிகள் -

என்னை
பொய்யாக்கிய, மெய்
- நீ -

என் பேனா கூட
மறுக்கிறது
உன்னை நினைக்க !

எம் பிரிவால்
வீணாய் சிக்கித் தவிக்கின்றன
- நம் இதயங்கள் -

பார்வைகள் இல்லாவிட்டாலும்
நாமும் காதலிப்போம்
நம்பிக்கையால்....

Comments

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs