ஏன் இந்த கொடுமை????




அதை நினைக்கையிலே............
தலை சுற்றுகிறது
மூளை சிந்திக்க மறுக்கிறது
கண்களோ இமைகளையும் சேர்த்து
மூடிக் கொள்கின்றன
உள்ளமோ விரும்ப மறுக்கிறது
நரம்புகள் பின்னிப் பிணைகின்றன
இதயத் துடிப்பு அதிகரிக்கவே
இரத்த ஓட்டம் ஆர்முடுகளடைகின்றது
வேதனைகள் உணரப்படுவதோடு
சோதனைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன
கால்களோ நடக்க சோம்பல் படுகின்றன
மொத்தத்தில் முழு உடலும்
செயற்பட மறுக்கிறது.......
போதாக்குறைக்கு இயற்கையும் சில தடைகளுடன்
விளையாடுகின்றன என்னுடன்......
ஏன் இத்தனை சிக்கல்கள்
நாளை மறுநாள்
மறுபடியும் ஆரம்பிப்பதாலோ...................

Comments

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

மனக் குரங்கு