சில வரிக் கதைகள் - 1

சீதனம்?
"இந்த சீதனம் எனும் பிச்சை எடுக்கும்
பிழைப்பு எனக்கு வேண்டாம். நீங்கள்
உங்கள் மகளை கட்டிய புடவையுடன்
அனுப்பி வைத்தாலே போதும். உங்கள்
மகளை ராணி மாதிரி வைத்துக்கொள்வேன்".
என்று தொலைக்காட்சி தொடர்கதையில் நாயகன் ,நாயகியின் அப்பாவிடம் சொன்னதுமே மாலாவுக்கு ஒரே சந்தோசம். மாலா
சீதனக் கொடுமையால் திருமனமாகாமல் 35
வயதை தாண்டியிருக்கும் ஏழைப் பெண்.
பொய் வேஷம்
பெண் என்றால் பேய்
பெண்ணே உலகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேர்
பெண்ணில்லாத உலகே என் கனவுலகு
என எவ்வாறெல்லாம் பெண்ணை (வர்ணிக்க?) முடியுமோ அப்படியெல்லாம்
கவிதை பாடிய தொழில்முறை கவிஞன் திடீரென மௌனியானான் ,
வார்த்தைகள் வராமல்,
அவன் முன்னால் அவனது அழகிய புதிதாய் திருமனம் முடித்த அவன் மனைவி தேனீருடன்.......
மாற்றம் !!
குடிக்கிறான்.........குடிக்கிறான்.......அவனால் முடியவில்லை அவனை விட்டு பிரிந்து சென்ற
அவளை மறக்க. ஞாபகச் சுமைகளை மீட்டுகிறான் அவன். இனிமையான அவன் இளமை
வேட்டு வைக்கப்பட்டதை தான் அவனால் பொறுக்க முடியவில்லை.அவள் மேல் உள்ள கோபமோ
அவளை கண்டாலே கொன்றுவிடுமளவுக்கு. அவளை எப்படியும் பழி வாங்கி விடும் என்னத்தில்
மூன்று வருடங்களாய் காத்துக் கிடக்கிறான். அவன் எண்ணங்கள் கழுவுண்டு அனைத்தும் போயின,
தாய்மையை அடைய காத்திருந்த அவளை நேரில் பார்த்தவுடன்.......

யதார்த்தம்
நீயெல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்? உனது எதிர்காலம் கேள்விக்குறி தான்.
உன்னைப் போல் எத்தனை பேரை நான் பார்த்திருக்கிறேன் தெரியுமா? நீ வேண்டுமானால்
பார் உன்னை ஒரு நாள் நான் எந்த கோலத்தில் சந்திக்கப் போகிறேன் என்று....
என அன்று அவனது விஞ்ஞான ஆசிரியர் திட்டியவை அனைத்தும் அவன் கண்
முன் தோன்றின,அவன் அப்பாடசாலை அதிபராக பதவியேற்று அதே ஆசிரியருக்கு
"வாழ்நாள் சிறந்த சேவையாளர்" விருதை வழங்கும் போது..............
ஏன்?
கல்லூரியில் அவளோ யாருடனும் அதிகம் பேசவோ, பழகவோ மாட்டாள்.
எந்த நேரம் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தவளைப் போலவே முகத்தை
வைத்துக் கொண்டே இருப்பாள். தான் என்ன ஆடை அணிகிறேன்? தான் எவ்வாறு
மற்றவர்களுக்கு தோற்றமளிக்கிறேன்? என எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டாள்.
தனக்கென்று எதையுமே செய்ய மாட்டாள். தான தர்மங்களை மட்டும் அதிகம் அதிகம் செய்வாள்.
அவள் ஏன் அப்படி என அன்ரு புரியாதவர்களுக்கு, இன்று விடை தெளிவானது ,
அவள் குருதிப் புற்று நோயால் இவ்வுலகத்தை விட்டே பிரிந்துவிட்டால் என்ற செய்தி அறிந்தவுடன்......
Comments
Post a Comment