முதல் சந்திப்பு
நம் உதடுகள்
மௌனித்தாலும்
கண்கள் கைத்தட்சிட்டன
இதயப் பரிமாற்று ஒப்பந்தத்தில்


இரவு
சூரியன் கூட ஓய்வில்
ஆனால்
சதா உன்னை நினைத்த வண்ணம்
என் இதயம்


நிஜம்
நீ அழ்கானவள்
என்பதற்காய். நான்
உன்னை காதலிக்கவில்லை
நான் காதலிப்பதால்
என்னவோ
நீ எனக்கு
அழகாய் தெரிகிறாய்


நிறம்
வெண்சிரிப்பு,
செவ்வாய்,
கருவிழி, மஞ்சள் கண்ணம்
அறிந்தேன் நிறங்களை
உன்னில்


ஒப்புவமை
பெண்ணை
நிலவென்றது அன்று
இன்றோ
நானொரு புது முயற்சியில்
நிலவை
உனக்கு ஒப்பித்துட !


பாவம் நான்
உள்ளுக்குள்ளே
செத்துப் பிழைத்தேன்
நான்
பதிலுக்காய் காத்திருந்த
காலங்களில்


வேண்டாம் !
வார்த்தைகளை அள்ளி வீசாதே
எனக்கும் உண்டு
உனக்கு உள்ளது போல
இதயமொன்று !

Comments

  1. nice poems...like to be love failure one...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

Taking notes on the 250th -SLC