மை உம் நாமும்

"மை" உம்
நாமும்
அழிக்க வேண்டியது -
இயலாமை
உஷ்னத்தினால் நாடுவது -
குளிர்மை
பலத்தைக் கூறுவது-
வல்லமை
மக்களை வாட்டுவது-
வறுமை
மனிதனை அழிப்பது-
பொறாமை
கொள்ளக் கூடாதது-
பகைமை
பொறுமை
கொல்ல வேண்டியது -
சிறுமை
விலை மதிப்பற்ற பருவம்-
இளமை
இளமையில் வரக்கூடாதது -
ஏழ்மை
நல்லவர் செய்வது-
நன்மை
நல்லோரல்லாதோர் செய்வது -
தீமை
நான் வெறுப்பது -
தனிமை
ஒன்றுமே இல்லாதது -
வெறுமை
எம்முள் வரக்கூடாதது -
வேற்றுமை
சொல்லில் இருக்க வேண்டியது -
வாய்மை
வாழ்வில் இருக்க வேண்டியது -
எளிமை
பேச்சில் தெரிய வேண்டியது - இனிமை
நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை -
தன்மை
மற்றவருக்கு செய்யக் கூடாதது -
கொடுமை
உலகம் விரும்புவது -
பசுமை
முடிந்தளவு ஒரே சமயத்தில் முயற்சித்துள்ளேன்.
ஏதும் விடுபட்டிருந்தால் அறியத்தரவும்
Comments
Post a Comment