உண்மை
என் மீதி வாழ்வு
இதயத்தின் ஓரத்தில்
வாழும்
உன் நினைவுகளில்


மாயம்
வந்தாய்
அதே போல
சென்றாய்
இடைவெளிக்குள்
இதென்ன புதிதாய்?


ஏமாற்றம்
முகவுரை என
எண்ணிய எனக்கு
முடிவுரை எழுதியது
உன் மூன்று வர்த்தை பதில்


ஐயோ !
தொந்தரவு வேண்டாம்
என்று சென்றாய் நீயும்,
ஆனால் இன்றுவரை
தொந்தரவு செய்யப்படுகிறேன்
நான்


ஏக்கம்
அடிக்கடி
பார்க்காவிடினும்
பார்க்கும் ஒரு முறையாவது
புன்னகையுடன் பார் !!!!


நீ
இருட்டிலிருந்த
இதயத்தை
ஒளியேற்றிய
மெழுகுவர்த்தி


ஏமாற்றம்
பாவம்
பட்டாம்பூச்சி கூட
ஏமார்ந்து போனது
பூவென உன்னை எண்ணி



Comments

  1. கவிதைகள் நல்லா இருக்கு.... :-))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொட்டும் தொடாமலும்

கிறுக்கல்கள்