
HIJAB எனும் காவலரண்
இந்தப் பதிவு "தமிழச்சி.com" இலே 2010-08-02 திகதியன்று வெளியான
கவிதைக்கு பதிலளிக்கும் நோக்கில் எழுதப்பட்டது.
தமிழச்சி.com வெளியான கவிதையைப் பார்க்க
கீழுள்ள link ஐ பயன்படுத்தவும்.
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=2164
இந்தப் பதிவில் Dr.Zakir Naik அவர்களின் Most Common Questions asked by Non-
Muslims என்ற நூல் உதவிக்கு பெறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க.
அன்பின் சகோதரியே அல்லது சகோதரனே
"தமிழச்சி.com" எனும் இணையத் தளத்திலே
தான் யாரென்பதையே தெரியாமல்
அதை மறைக்க
எதை எதையோ சொல்லி
நழுவத் தவிக்கும் பேதையே
நீ முஸ்லிம் சகோதரியை பார்த்து கேட்ட
கேள்விகள் இரண்டு
இரண்டுக்கும் விடை உண்டு
எம் புனித நூலாம் அல்-குர்ஆனில்
இருந்தாலும், என்னால் முடியவில்லை
அதை இந்த நடையில் எழுத
உன்னைப் போன்றவர்களுக்காகவே
இதற்கான பதிலை, தந்துள்ளார்
ஓர் இஸ்லாமிய அறிஞர்
படித்துப் பார் உனக்கும் புரியும்
நீ கேட்ட கேள்விக்கு பதில் அதிலே
ஆனால் நீ தான் தமிழச்சி ஆச்சே.....
ஆங்கிலத்தில் இருப்பதால் சிக்கல்கள் இல்லையே?
http://www.islamforsalvation.com/2009/07/25/why-does-islam-degrade-women-by-keeping-them-behind-the-veil/
இப்போது நீ சொல்
நீ விரும்புவது
உடலை மறைத்தும் மறைக்காதா ஏதோ உடுத்தாக வேண்டுமே என
அணியப்படுபவைகளா?
அல்லது
அங்கங்களை அப்பட்டமாக காட்டும் இறுக்கமான ஆடைகளா?
அல்லது
எல்லவற்றையும் கண்ணாடி போல் வெளிச்சம்
போட்டு காட்டுபவைகளா?
அப்படி இல்லையென்றால்
மாற்றனை கவர்ந்திழுத்து காலடியில் பணிய வைக்க நினைப்பவைகளையா?
அல்லது
பால் எது என்பதையே அடையாளம் காட்டாத
நவீனங்களையா?
சொல் இந்த பதிலை உன்னிடமிருந்தே எதிர்பார்க்கிறேன்.....
மார்க்கமானது ஆண்களுக்கு
கட்டளையிட்டதன் பின்னாலே பெண்களுக்கு சொல்கிறது
புரியவில்லையென்றால் கீழே படித்துப் பார்....
அப்போதாவது புரியுமென நம்புகிறேன்.......
24:30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்;
அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்........................
24:31 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், .................
Jazakallahu Khair
Dr.Zakir Naik
Comments
Post a Comment