என் தனிமைக்கு
தோள் கொடுக்கும்
அறைத் தோழன்
-உன் நினைவுகள்



பாழடைந்த என்
இதயத்தின் கதவுகள்
சாவி இல்லாமலே திறக்கப்பட்டன
உன் புன்னகையால்



முடிந்தால் சொல்லியனுப்பு
முடியவே முடியாதென்று
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்



மறுக்காமல் நீ வேண்டுமெனக்கு
ஏனெனில்
ஒருக்காலும்
மறுகாதல்
சறுக்காமல் போகாது.



கன்களும் பொய் சொல்கின்றன
உன் விடயத்தில்
சந்தோசமாய் இருப்பவனாய்
என்னை காட்டி


வெறுங்கையோடு வந்த நீ
செல்கிறாய்
என் இதயத்துடன்
அனுமதியின்றி அதை பரித்தவளாய்





Comments

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

Taking notes on the 250th -SLC