யார் நீ ?



நீ என்னிடம் வந்து
மூன்று வருடங்கள் தான் ஆனாலும்
முப்பது ஆண்டு வாழ்ந்த உணர்வு
என்னுள்ளே

மூன்று வருடத்துக்குள்
உன்னுள் சிறு சிறு மாற்றங்கள்
வந்தாலும்,
எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
உன்னுடனே பின் தொடர்கிறேன்
பேதை நான்.

பலர் உன்னை விட்டு விட சொல்லியும்
இவனால் முடியவில்லை
உன்னை விட்டு போக
சில நேரம், சிலர் என்னை
உன் அடிமை என்றும் கூறியதுண்டு
ஆனாலும் நானே என்னை
தேற்றிக்கொண்டு, அடுத்த கணமே
உன்னையே நாடி வந்ததுண்டு.

உண்மையில் நீ யார்?
துவண்டிருக்கும் போது என்னை
ஆற்றும் என் துணையா?
இல்லை
இன்ப துன்ப பங்கு போடலின்
முன்னோடியான உயிர் நன்பனா?

இல்லை
சிக்கலில் இருந்து விடு பட
உதவும் என் சோதரனா?
அப்படியும் இல்லையென்றால்
அந்த சிக்கலையே சில வேலை
உருவாக்கும் என் ஆஸ்தான எதிரியா?
யார் நீ ?

நீ எனக்கு மட்டுமல்லாது
பலருடனும் உன் எண்ணங்களை
பகிர்வதால், எனக்குள் ஏற்பட்டதுண்டு
உன் மேல் வெறுப்பு
இருப்பினும் இல்லை என்னிடம் அது
அடுத்த நொடி
நீ அவ்வளவு வித்தை தெரிந்த
மாயக்காரியா?

சரி இனிமேலும் மறைப்பதில் அர்த்தமில்லை
நானே சொல்லிவிடுகிறேன்
நீ யாரென்பதை.
நீ தான்
என் இனிய "facebook" பக்கம்




Comments

  1. Dear Brother,what are you doing actually?
    - From Imran E/07

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Taking notes on the 250th -SLC

Unknown facts in a known sector

Through my LeNsEs