நன்பா !!!! வேண்டாம் இந்த அவலம்

நன்பன் புகையிலையுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால்,
அவனுக்கு புத்திமதி சொல்ல முடியாமலும், ஏதாவது செய்து கொள்ள முடியாமலும் தவிக்கும் உங்களைப் போன்றதொரு நன்பன் இவன்.


நன்பா
!!!!

வேண்டாம் இந்த அவலம்





என் ஆருயிர் நன்பனே
உன் மேல் எந்த கோபமுமில்லை
கோபமெல்லாம்
உன் இரு விரல் நடுவே
புதிதாய் வந்து சேர்ந்த
மூன்றாம் முட்டாளுடன் தான்
ஆம், அந்த "சிகரெட்" உடன் தான்.


எங்கிருந்தான் இவ்வளவு
நாளாய் அவன்
நீ துவண்டிருந்த போது வராதவன்
நீ படிக்க கஷ்டப்படும் போது வராதவன்
உன் பிரச்சினைகளில் பங்கெடுக்காதவன்
திடீரென
உன்னிடம் வருவதில் என்ன நியாயம் ?


சிகரெட் உடலுக்கு கேடு,
சமூகத்துக்கும் கேடு,
அதற்கு மேல் மார்க்கத்தில்
அனுமதியே இல்லை என்பதும்,
உனக்கு தெரியும் என்பது
எனக்கு தெரியும்.
இருந்தாலும் சும்மா இருக்க
முடியவில்லைஎன்னால்........


"மூளையின் அளவு, வாயிலுள்ளதின் அளவு"
என்று ஊர் முழுவதும்சுவரொட்டி அடித்தாலும்
உன் நெஞ்சுக்கு படாது
என்பதில் எனக்கு நிச்சயம்
ஆம், இப்போ அந்த நெஞ்சேபழுதாகிவிட்டது
என்பது வேறு கதை.
நானும் உன்னிடம் சொல்ல பயப்பட்டேன்
எங்கே நட்பு கேள்விக்குறியாகி விடுமோ?
என்பதால்


"நாங்க ஒன்னும் addict ஆகலயே
சும்மா பொடிய மாரோட fun தானே"
என சமாளிக்கும் பலருள் நீயும் ஒருவன்.
இந்த fun தான் எங்கெல்லாம்
கெடுதிஇருக்குமோ அங்கெல்லாம்
உன்னை அழைத்துச் செல்லும்
என்று தான் எனக்கு பயம்.


என்ன செய்ய?
என்னால் உன்னிடம் சொல்லாமல்
இருக்க முடியவில்லை
பட்டென்று ஒரு நாள் போட்டு
உடைத்தேன்.இருந்தும் பயனில்லை அதனால்
நீ விட்ட பாடுமில்லை, இறுதியில்
எஞ்சியது உன்னிடமிருந்த நட்பில் தொய்வு
மட்டுமே !


நன்பா நீ எனக்கு மட்டுமல்ல
உன் குடும்பத்துக்கும்,
ஏன் இந்த சமூகத்துக்கும் தேவை
வீணாய் போன ஒன்றுக்காய்
நீ எல்லாவற்றையும் இழந்து விடாதே!
தயவு செய்து.
இது கட்டளையல்ல
என் அன்பு கட்டளை.



Comments

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

Taking notes on the 250th -SLC