சம்பந்தமில்லாமல்..............

சம்பந்தமில்லாமல்...............

நுணிப் புல்லில் பனி படர்ந்திருந்த வேளை , சூரியன் தன் கதிரை சற்றே விரிக்கும் வேளை ,பறவைகளின் கீச்சிடும் ஒலியை கேட்டவண்ணம், எழுந்த நான் படுக்கைக்கு கிட்டவே வந்த "bed coffee" ஐயும் அருந்தினேன். bed coffee என்றதும் நினைவுக்கு வந்தது.... கட்டிலில் படுத்தெழுந்தவுடன் அருந்தினால் bed coffee என்றால், பாயில் படுத்தெழுந்தவன் அருந்தும் போது அது "mat coffee" ஆகி விடுமோ? அது அப்படி இருக்கட்டும் சென்றவாரம் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியதானது.(அழையா விருந்தாளியாக அல்ல என்பதை கவனத்தில் கொள்க). அங்கே சென்ற போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒரு கவிதை மனதில் எண்ணியது, கொஞ்சம் அதையும் தான் பார்ப்போமே?(எவ்வளவோ பண்ணிட்டோம் , இத பண்ண மாட்டோமா?)

இரு மனம் இணயும்
இந்தத் திருமணம்
நறுமணம் கமலும்
சோலைவணமாக மாறா
இந்தத் தனி மனதின் வாழ்த்துக்கள்.

மாறாக
ஒரு மனமாய் மறுபடியும்
இரு மனங்களாக மாறி
மறுமணம் புரியாமல் வாழ
இனி மனதில் உறுதி கொள்க.

எப்படி?
மேல் வரி ஒ.கே, அடுத்ததையும் சொல்லியிருந்தால், கண்டிப்பாக பலரது கைகள் என்னை பதம் பார்த்திருக்கும். நல்ல வேளை ஒன்றுமே கூறாமல் வந்து விட்டேன்.(எங்க இனி, கல்யாணம் எண்டாலே மணவறை பக்கம் தல வெச்சி படுக்க மாட்டோம், மொய் எழுத வேண்டிய பயத்தால)

அப்படித்தான் அன்றொரு அரசியல்வாதி, தன் நா தானே என்ற அகந்தையில், எதை எதையோ எல்லாம் அரசியல் வாக்குறுதிகளாக அளித்து கொண்டிருந்தான். அப்போது மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன் இவ்வாறு

குடிகாரன் பேச்சாய் போகும்
சொல் வீச்சுகள்
- அரசியல் வாக்குறுதி

நல்லாவே இல்லையா? ஹைக்கூ. பரவாயில்லை. இந்த அரசியல் ஜோக் ஐயாவது பாருங்களேன்.

நிருபர்: ஐயா நீங்க ஏன் கட்சி மாறினீங்க?
அரசியல் வாதி: அந்த கட்சி தலைவர், சும்மா வாலாட்டக் கூடாதுன்னு மெரட்டிகிட்டே இருந்தாரு..
நிருபர்: அப்போ இங்க?
அரசியல் வாதி: இங்க.......தலைவருக்கு தலையாட்டினா போதும்னாங்க......

இந்த ஜோக் நம் மந்திரிகளுக்கு நன்றாகவே பொருந்தும் போலும்.(தேவையில்லாம பேசாத........வெலிக்கடை மிச்சம் தூரம் இல்ல.........)


சந்திப்போம்.........














Comments

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

Taking notes on the 250th -SLC