நான்

நான்



நான்,
ஓர் இரண்டெழுத்து உலகம்
எனக்குள்ளே பல மனிதப் பரிமாணங்கள்
அவற்றிற்கிடையே பல யுத்தங்கள்,
எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய
ஐ.நா சபையாக நான்

அதனாலோ என்னவோ, எனக்கே சந்தேகம்
என்னைப் பற்றி- நான்
நல்லவனா? இல்லை கெட்டவனா?
விடை தெரியா கோழி,முட்டை கேள்விகளுள்
இதுவும் ஒன்று
என்ன செய்ய விடை காணும் கடப்பாடு
என்னிடம் மட்டுமே- காரணம்,
கேள்வியும், விடையும் எனதே !

நான் இப்படித்தான் என்பதில், எனக்கு உறுதி
கண்டிப்பாக முகம் தெரியா அந்த நான்கு பேருக்காய்
வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அதனாலோ என்னவோ பலருக்கு
நானொரு கேள்விக்குறி!
வேதனை, மிக நெருக்கமானவர்களுக்கும்
இதே கேள்வி இருப்பது.
வெளிப்படையாய் வாழ்வதில் அப்படியென்ன
தவறை கண்டுவிட்டார்கள்?

எப்படியும் வாழலாம் என்பதிலும், எனக்கு
உடன்பாடில்லை
போகிற போக்கில் அடிபட்டு செல்லவும்
பிடிப்பில்லை
அவற்றை தடைதாண்ட நினைத்தாலும்- என்னை
விடுவாரில்லை.
என்ன செய்ய அப்பாவி இவன்?

சில பழக்கங்கள் , அதுவும் என்னை
ஏன் அடுத்தவரையும் பாதிக்காதவை என்னிடத்தில்
செய்யவும் நாட்டமில்லாமல் ,விடுவதற்கும் மனமில்லாமல்,
இருகால் தோணியில் சவாரி செய்யும் கிறுக்கனாய்
நான்
இறைவன் நாடினால், எல்லாமே
என்றாவதொரு நாள் சரியாகி விடும்
அந்த நம்பிக்கையிலேயே வாழ்க்கைப் பயணம்
தொடர்கிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

What INTERNET means to me......

Through my LeNsEs

Taking notes on the 250th -SLC