உனக்கெனவென்றொன்று உள்ளது போல
எனக்கெனவென்றொன்று வேண்டுமென்ற
என் ஆசையில்
என்ன தவறை கண்டுவிட்டாய்?

எனக்கென நீ எப்போதுமே
என்னுடனேயே வேண்டும்.
நீயும் உனக்கென்றானவனை
அப்படித்தான் நினைத்திருந்திருப்பாய்

இருந்தும் பலனில்லை ,உன் நினைப்பில்
காரணம்
உனக்கெனவென நீ நினைவில் வைத்திருக்கும்
அவன்,

அவனுக்கெனவொன்றை தேடிச் செல்லும் நாள்
வெகு தொலைவில் இல்லை
அப்போது புரியும் உனக்கு
உனக்கெனவே என்று யார் இருப்பான் என்று
காத்திருப்பு தொடரும் , அது வரையில்.....

Comments

Popular posts from this blog

Taking notes on the 250th -SLC

Unknown facts in a known sector

Through my LeNsEs