மாற்றம்

மாற்றம்
எல்லோரும் மாறி விட்டனர்
அவனும் ,அவளும்
ஏன்..
நீயும்,நானும் கூட தான்
நண்பனும் மாறி விட்டான்
அவன் கேட்கும் கேள்விகளும் மாறி விட்டன
நண்பர்களும் மாறிவிட்டனர்
அவர்களிடமிருந்து வரும் செய்திகளும் மாறிவிட்டன
உறவுகளும் மாறிவிட்டன
சுற்றியுள்ள சூழலும் மாறிவிட்டது
தம்பி மார்களும் பெரியவர்களாகி
தப்பான மாற்றத்திற்குள்ளாகி விட்டனர்
ஏன் உயிருள்ளவை மட்டுந்தானா மாறவேண்டும்
என்ற கேள்வியுடன்
முகப்புத்தகம் கூடத்தான் மாற்றிகொண்டது
தன் " chat screen" ஐ
இருந்தாலும் சந்தோசம்
ஒன்று மட்டும் மாறாமல்
அன்று போல் இன்றும்
அதுதான் அந்த ஒன்று "மாற்றம்"
A nice one..continue writing...
ReplyDeleteYour friend
Murshidh